Anjahli

welcome

Hi! Friends I'M Back...............Let's ready to laugh!!!!!!!!!


  • என்னதான் கருணாநீதி டி.எம்.கே ல இருந்தாலும் அவர் வீட்டு மாடு "அம்மா " னு தான் கத்தும்.
__________________________________________________________
  • வாழ மரம் தார் போடும் அத வச்சி ரோட் போடா முடியுமா?
__________________________________________________________
  • என்னதான் ஈரோபிலேன் மேல போனாலும் பெட்ரோல் போட கீலத்தான் வரணும்.
__________________________________________________________
  • "hand wash " னா கை கழுவுறது , "Face wash " னா முகம் கழுவுறது , " Brain wash" னா பிரைன் கழுவுறதா?
__________________________________________________________
  • Tea cup ல tea இருக்கும் வேர்ல்ட் கப்லா வேர்ல்ட் இருக்குமா ?
__________________________________________________________
  • Cell மூலமா sms அனுப்பலாம் ஆனா sms மூலமா cell ல அனுப்ப முடியாது.
__________________________________________________________
  • Daily Calendar- ல தேதி கிழிக்கிறது முக்கியமில்ல , அந்த தேதில நீ என்ன கிளிச்சன்றது தான் முக்கியம்.
__________________________________________________________
  • பாம்பு எத்தன தடவ படம் எடுத்தாலும் அத ஒரு தடவ கூட Theatre-La Release பண்ண முடியாது...........
__________________________________________________________
  • நீங்க என்னதான் போட்டு கோழி வளர்த்தாலும் அது முட்டைதான் போடும் 100/100 எல்லாம் போடாது.
__________________________________________________________
  • கண்ணா பஸ் ஸ்டாப் ல பஸ் வந்து நிற்கும் அனா Full Stop ல Full வந்து நிற்குமா?
__________________________________________________________
  • பக்கு மரத்துல பக்கு இருக்கும் தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் அனா பண மரத்துல பணம் இருக்காது..........!!!!
__________________________________________________________
  • Cycle ல போனா Cycling, Train ல போன Training-ஆ?
__________________________________________________________
  • Mechanical Engineer Mechanic ஆகலாம் ஆனா SoftwareEngineer Softwareஅக முடியாது.........
__________________________________________________________
  • Key Boarல Key இருக்கும் ஆனா Mother Boardla Mother இருக்குமா ?
__________________________________________________________
  • நீ என்னதான் பெரிய படிப்பாளிய இருந்தாலும் Exam Hall லபோய் படிக்க முடியாது.
__________________________________________________________
  • School டெஸ்ட்ல Bit அடிக்கலாம் ......... College டெஸ்ட்லBit அடிக்கலாம் ....... ஆனா Blood டெஸ்ட்ல Bit அடிக்க முடியாது.
__________________________________________________________
  • என்னதான் னை நன்றி உள்ள மிருகமா இருந்தாலும் அதாலThank You சொல்ல முடியாது !!!!!!!!
__________________________________________________________
  • Lunch Bag ல Lunch கொண்டு போகலாம் .. But School Bag ல Shool ல கொண்டு போக முடியுமா ???????
__________________________________________________________
  • ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்தி ஒன்னு தான் பெரிசு ..............
__________________________________________________________
  • என்னதான் அஹிம்சவாதியா இருந்தாலும் சப்பாத்திய சுட்டு தான் சாப்பிடனும் ....
__________________________________________________________
  • நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிர் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது.....
__________________________________________________________
  • கோவில் மானிய நாம அடிச்சா சத்தம் வரும் .......கோவில் மணி நம்மள அடிச்சா ரத்தம் தான் வரும்.........
__________________________________________________________
  • மேலுக வச்சி மெழுகு வத்தி செய்யலாம் ... ஆனா கொசுவ வச்சி கொசு வாதி செய்ய முடியாது .......
__________________________________________________________
  • பல்லு வலினா பல்ல புடுங்க முடியாது..........
__________________________________________________________
  • இட்லி போதிய தொட்டு இட்லி சாப்பிடலாம் ஆனா மூக்கு போதிய தொட்டு மூக்கு சாப்பிட முடியாது............
__________________________________________________________
  • கடமைய செய் பலனை எதிர் பார்க்காதே ..! இது கீதையில் சொன்னது காதல் செய் கல்யாணம் செய்யாதே இது போதையில் சொன்னது.
__________________________________________________________
  • நீ நிலவை பார்த்தால் கடவுளின் அழகு புரியும் .. சூரியனை பார்த்தல் கடவுளின் சக்தி புரியும் ..நீ கன்னடிய பார்த்தல் கடவுளின் தப்பு புரியும்.......
__________________________________________________________
  • பூவுக்குள் தேன், நெல்லுக்குள் அரிசி , மண்ணுக்குள் வைரம் , "உன் மனச தொட்டு சொல்லு ? உன் மண்டைக்குள் களிமண் தானே !!!!
__________________________________________________________
  • Bakery shop: Paarthiban;உங்க கடையில எல்லா bun உம் கிடைக்குமா vadivel: ஆமா ...
  • Paarthiban: ok 1kg ribbon 1kg carbon கொடு...
__________________________________________________________
  • Professor: உலகம் ஒரு நடக மேடை அதில் நாம் எல்லாம் நடிகர்கள்
  • Student: சரி எனக்கு யார ஜோடிய போடுவாங்க sir....
__________________________________________________________
  • Sardar 1: I spoke to Sania Mirza yesterday on the
phone . Sardar 2 : thats great. What did she say?
Sardar 1: Wrong number.
__________________________________________________________
  • Think different do different.. Make different... Achieve different... Spead different...Then only you can goto Metal Hospital.....
__________________________________________________________
  • பிச்ச எடுப்பது எப்படி????..............................................................................................................
பிச்ச எடுக்க இவ்வளவு ஆசையா! சொல்லவே இல்லை......
__________________________________________________________
  • Namitha-கு 5 வயசு ,ருக்கும் போது அவங்க பேரன்ட்ஸ் எப்படி கூப்பிட்டு இருப்பாங்க ??????
.....................................................................................................ரொம்ப முக்கியம் போய் வேலைய பாருங்க
__________________________________________________________
  • Vadivel: என்பா இட்லி சில்லுனு இருக்கு ?
Parthiban:போர்டு ல என்ன போட்டு இருக்கு ..
vadivel:ஆரிய பவான் ..........
Parthiban: அப்புறம் என்ன சூடவ இருக்கும் ! கொய்யால ............
__________________________________________________________
  • Latest திருக்குறள் 'Beedi" யால் சுட்ட புண் ஆறினாலும்
ஆறாதே 'Brandy' யால் வந்த வயிறு " send this sms to
10 'kudimagan' you will get a "Quater" Free...
__________________________________________________________
  • Stu 1: ஏண்டா உன்ன ப்ரின்சிபால் திட்டினர்
stu 2: ப்ரின்சிபால் அவரோட நாய காணோம்னு பேப்பர் ல எட் கொடுக்க சொன்னார் நான் "ப்ரின்சிபால் நாய " காணோம்னு கொடுத்துட்டேன் ....
__________________________________________________________
  • கம்பி 1 கம்பி 2 கம்பி i3 கம்பி 4கம்பி 5 கம்பி 6 கம்பி 7
கம்பி 8 கம்பி 9 Ha ha ha ha........... எப்படி உன்ன பிளான் பண்ணி கம்பி என்ன வச்சேன் பார்த்தியா ........
__________________________________________________________
  • Sardar: "This book is very bore. More characters but no story" Librarian: " வாடா ... வா .. நீதான் டெலிபோன் டிறேக்ட்ரி ய தூக்கிட்டு போனவனா ? ...
__________________________________________________________
  • ஒரு விடுகதை சொல்லட்டுமா .... "தகர பெட்டிக்குள் மோகினி பிசாசுகள் " அது என்ன ....? தெரியலையயா ..? அதுLADIES college bus....
__________________________________________________________
  • Pricipal:ஏன்டா லேட் ?; Student: Bike puncture/repairsir; Principal: Busல வாரது தானே ?; Student: Bus வாங்க காசு இல்லை சார்....
__________________________________________________________
  • Sardar: 50 rupeesஇருந்தா கடன கொடுங்க ...! Man: பணம் சுத்தமா இல்லீங்க .! Sardar:பரவயில்ல , அலுக்கா இருந்தாலும் கொடுங்க ...
__________________________________________________________
  • Girl: Darlingநீங்க என்கிட்டே எத பார்த்து லவ் பண்ணீங்க ..? Boy: Darling இன்னும் எதையும் பார்க்கல...! பர்க்கலாம்னுதான் லவ் பண்ணுறேன் செல்லம் ..!
__________________________________________________________
  • Lights went off in girls hostel the watchman galled upTNEB office and says " Send your men immediately because the Girls are using candles.....
__________________________________________________________
  • நான் ஏன் உன்ன நினைக்கிறேன் ? உன் கூட பேசுறேன் ? உனக்கு மெசேஜ் பண்ணுறேன் ? அத ஏன் நீ படிக்கிற ? BECAuse " நாம ரெண்டு பேருக்கும் வேற வேல இல்லை ....
__________________________________________________________
  • Figureஇல்லனா college waste sugar இல்லனா coffewaste. Love இல்லான life waste. Moonஇல்லைன்னா sky waste. செல்லம் நீ இல்லைன்னா....Zoo waste!....
__________________________________________________________
  • Dog likes BONE. Elephant likes BANANA . Ant likes Sugar. Cow likes Grass. And monkey likes what...?
.............................சொல்லுப்பா உனக்கு என்ன பிடிக்கும்
__________________________________________________________
  • Gathered in a large hall, an angel asked us to write down our sins before entering the heaven. Before I could start wrting I heard you shouting "AddtionalSheets Please!!!"
__________________________________________________________
  • மனசு சரியில்லன்னு டாக்டர் கிட்ட போனேன் , டெஸ்ட் பண்ணிட்டு ஒரு லூசுக்கு sms அனுப்பு சரியகிடும்னு சொன்னார் . நீயே சொல்லுடா எனக்கு உன்ன விட்ட வேற யார தெரியும் ?
__________________________________________________________
  • Friend: நான் எத செஞ்சாலும் என்னோட வைப் குருக்க நிற்கிரா ... Friend2: Car ஒட்டி பாரேன் ...........
__________________________________________________________
  • Salesman: Sir எறும்பு powder வாங்கிட்டு போங்க ....Sardar: வேண்டாம் , இன்னிக்கு அதுக்கு பவுடர் வாங்கிட்டு போனா .. அது நாளைக்கு lips-stick கேட்கும் ...
__________________________________________________________
  • Oruvar: ஏனுங்க .. oஒரு கள்ள ப்ளூ கலர் சொக்க்ஸ் உம் மற்ற கால்ல பிரவுன் கலர் சொக்க்ஸ் உம் போட்டு இருகங்க ஏன்?Matravar: அதுதான் எனக்கும் புரியல வீட்லயும் இது மாதிரி ஒரு ஜோடி இருக்கு.....

__________________________________________________________
  • One day one boy and girl late to school. Teacher Asked Girl why were late, Girl: Sir i have lost my 1 rupee coin on the way while i am coming to school, i had searched for that for that i got late. Teacher asked boy why were u late, Boy says i am i am standing on that coin to hide.
__________________________________________________________
  • TEA STRONG AA IRUKA YENA PANANUM? ORU SPOON "CEMENT"PODANUM.

__________________________________________________________
  • Hai! E Sollu!! E e e Sollu!! E e e e e e Sollu!! Nallae e e e Sollu!! (Leave some spacing) ilichadhu podhumpo poi palla velakkuga... Good MoRnInG...Have a niceday...
__________________________________________________________
  • Love Marriageக்கும் , Arrange marriage க்கும் என்னdifference?? நாமளா கெணத்துல விழுந்தா அது lovemarriage... 10 பேர் தள்ளி விட்டா அது arrangedmarriage..
__________________________________________________________


  • Kasu Irundha Call Taxi!!! Kasu Illaina Kall ThanTaxi!!!
__________________________________________________________
  • Pant Pottu Muttipoda Mudiyum Aanaaa Muttipottu PantPoda Mudiyumaa..
___________________________________________
My dear friend Un peyaraikuda, naan eudhuvadillai,
"penamul" unnai kuthidimo endru...! dai...no...no..
Ala koodathu....control Ur-self....

__________________________________________________________
There is no Oil if Olives are not squeezed... No Wine,
if Grapes are not pressed.... No Perfume, if flowers
are not crushed... If yhou feel any pressure... Don't
worry... be assured it will bring out the best in YOU
__________________________________________________________
The tree does not withdraw its shade from the
Woodcutter, so don't hate your enemies
__________________________________________________________
Life is like cotton, don't make it heavier by sinking
it in water of sorrow

__________________________________________________________
Little keys can open big locks. Simple words can
express great thoughts. My tiny SMS can make your day
Great!
_____________________________________________________

Keep smiling always guys..................

இணைய மற்றும் தொழில்நுட்ப போக்குகள் 2009... ஹைலைட்ஸ் :


2009 ஆம் ஆண்டில் ஆதிக்கம் செலுத்திய தொழிநுட்ப நிகழ்வுகள் மற்றும் இணையத்தின் முக்கிய போக்குகள் பற்றிய ஒரு பார்வை

தேடல் யுத்தம் துவங்கியது..!

2008-ல் கூகுல் குரோம் பிரவுசரை அறிமுகம் செய்து, மைக்ரோசாப்டுடன் பிரவுசர் யுத்தத்தை துவக்கியது என்றால், 2009-ல் மைக்ரோசாப்ட், 'பிங்' தேடியந்திரத்தை அறிமுகம் செய்து கூகுலின் தேடல் கோட்டைக்குள் நுழைந்தது. பிங்கின் பரபரப்பான அறிமுகத்தை அடுத்து விறுவிறுப்பான தேடல் யுத்தமும் ஆரம்பமானது.

மென்பொருள் மகாராஜாவான மைக்ரோசாப்டின் முந்தைய தேடியந்திர முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இருப்பினும், 'பிங்' தேடியந்திரத்தை பொருத்தவரை வடிவமைப்பிலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி பரவலாக பாராட்டப்பட்டது. பொருத்தமான தேடல் முடிவுகளை பட்டியலிடுவதில் பிங் கையாண்ட யுக்திகளும் பாராட்டப்பட்டது.

புதிய தேடியந்திரத்தை மைக்ரோசாப்ட் பிரம்மாண்டமான முறையில் விளம்பரம் செய்தது. பத்திரிக்கைகளும் நாளிதழ்களும் கூகுலுக்கான போட்டியாக பிங் உருவாகியிருப்பதாக எழுதின. அம்சத்துக்கு அம்சம் கூகுலோடு ஒப்பிடப்பட்டு பிங்கின் செயல்பாடுகள் அலசி ஆராயப்பட்டன.
மே மாதம் அறிமுகமான பிங் அடுத்த மாதம் 10 சதவீத தேடல் சந்தையை கையகப்படுத்தியதாக புள்ளிவிவரங்கள் வெளியாயின. ஆனால், கூகுல் தன் பங்குக்கு அலட்டிக்கொள்ளவில்லை. எப்போதும் போல் தேடல் சார்ந்த புதிய சேவைகளை அறிமுகம் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தது. பிங் முன்னணி தேடியந்திர அந்தஸ்தை பெற்றதே தவிர, தேடல் முதல்வன் என்னும் மகுடத்தை கூகுலிடம் இருந்து பறிக்க முடியவில்லை.

எப்பவும் நான் ராஜா!

ஜுன் 25 ஆம் தேதி நிகழ்ந்த மைக்கேல் ஜாக்சனின் மரணம் அவரது ரசிகர்களை உலுக்கியதோடு இன்டெர்நெட் உலகையும் அதிரச் செய்தது. மைக்கேல் ஜாகசனின் மரண செய்தி டிவிட்டரில் முதலில் வெளியாகி ரசிகர்களை பதற வைக்க, அந்த அதிர்ச்சி செய்தி உண்மைதானா என உறுதி செய்து கொள்ள ரசிகர்கள் இன்டெர்நெட்டுக்கு படையெடுத்தனர். அதன் பிறகு தேடியந்திரங்களில் திரும்பிய இடமெல்லாம் மைக்கேல் ஜாக்சன் தான். பாப் இசை மன்னன் ஜாக்சன் மரணம் உறுதியானதும் அவரைப் பற்றிய தகவகல்ளை தெரிந்து கொள்ளவும், இறுதிச்சடங்கு உள்ளிட்ட விவரங்களை அறியவும் ரசிகர்களும், பொது மக்களும் இன்டெர்நெட்டை முற்றுகையிட்டனர்.

ஜாக்சன் பற்றிய தேடல் கோரிக்கைகள் அளவுக்கு பன்மடங்கு அதிகமானதால் ஒரு கட்டத்தில் கூகுல் இது எதோ இணைய தாக்குதல் என்று அஞ்சி தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. ஜாக்சன் தொடர்பான இணையதேடலின் வேகமும் தீவிரமும் இன்டெர்நெட்டில் ஏற்பட்ட எரிமலை என வர்ணிக்கப்பட்டது. சர்சைக்குறியவராக வாழ்ந்து மறைந்தாலும் இசை உள்ளங்கள் மீது ஜாக்சன் எத்தனை செல்வாக்கு பெற்றிருந்தார் என்பதை இன்டெர்நெட் சரியாகவே உணர்த்தியது. அவரைப் போன்ற இன்னொரு இசைக்கலைஞர் பிறந்து வரவேண்டும்.

இந்த நேரத்தில் தேடல்!

140 எழுத்துக்களில் உடனடி பதிவுகளை வெளியிட உதவும் டிவிட்டர் சேவையின் எழுச்சி பெற்றதன் விளைவாக தேடல் உலகிலும் உடனடி தேடல் என்னும் புதிய கருத்தாக்கம் அறிமுகமானது. பொதுவாக தேடியந்திரங்கள் இணைய பக்கங்களை தொகுத்து வைத்துக்கொண்டு, அவற்றிலிருந்து பொருத்தமான தேடல் முடிவுகளை அள்ளிப்போடும். கூகுல் இதில் மன்னனாக இருக்கிறது. ஆனால், டிவிட்டரில் உடனுக்குடன் பகிரப்படும் தகவல்கள் இந்த தேடல் சித்தாந்ததையே மாற்றுவதாக அமைந்தது.

இணைய பக்கங்களையும் தளங்களையும் தேடுவதை விட்டுத்தள்ளுங்கள். இதோ இந்த நொடியில் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளப்படும் விவரங்களை தேடினால் செய்தியின் நாடித்துடிப்பை துல்லியமாக அறியலாம் என்னும் கருத்து முன்வைக்கப்பட்டது. இந்த கருத்துக்கு புதிய தேடியந்திரங்கள் செயல் வடிவமும் கொடுத்தன. ஒன் ரயாட் போன்ற தேடியந்திரங்கள் இத்துறையில் பிரபலமாக பிங் தேடியந்திரமும் டிவிட்டர் சார்ந்த வசதியை ஒருங்கிணைத்து கொண்டது. ரியல் டைம் சர்ச் என்று சொல்லப்பட்ட இந்த டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் சார்ந்த தேடல் புதிய அலையாக உருவானது. இறுதியில் கூகுலும் இந்த நேர தேடல் சேவையை அறிவித்தது.


விக்கி விவாதம்!

இணைய தொண்டர்களின் பங்களிப்போடு உருவாக்கப்படும் உலகின் மிகப்பெரிய இணைய களஞ்சியமான விக்கிபீடியாவின் ஆங்கில பதிப்பு 30 லட்சம் கட்டுரைகள் என்னும் மைல்கல்லை எட்டியது. இந்த சாதனை ஒரு புறம் இருக்க, புகழ்பெற்ற இயக்குனர் போலன்ஸ்கி சர்சையின் போது, விக்கிபீடியாவும் சேர்ந்து மாட்டிக்கொண்டு முழித்தது.

ஆஸ்கர் விருது வென்றவாரான ரோமன் போலன்ஸ்கியின் மேதமை மீது எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன் இளம்பெண் ஒருவரை பாலியல் பாலாத்காரம் செய்த வழக்கு தொடர்பாக அமெரிக்காவின் வேண்டுகோளின் படி ஸ்விஸ் நாட்டில் இவர் கைது செய்யப்பட, பெரும் சர்ச்சை உண்டானது. இந்தப் பழைய வழக்கில் சட்டம் தன் கடமையை செய்கிறது என்று சொல்லப்பட்டாலும், ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் திரை உலக பிரமுகர்கள் போல்ன்ஸிகியை விடுவிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர். வாழ்நாள் சாதனையாளர் விருது பெற வந்த தேசத்தில் அவர் கைது செய்யப்பட்டது சரியா என கேட்கப்பட்டது.

ஆனால், விக்கிபீடியா சமுகத்திலோ வேறுவிதமான மோதல் வெடித்தது. போலன்ஸ்கி தொடர்பான கட்டுரையில் இந்த கைது விவகாரத்தை எப்படி இடம்பெற வைப்பது என்னும் கேள்வியே மோதலுக்கு வித்திட்டது. போலன்ஸ்கி ஒரு திரை மேதையாக இருக்கலாம், ஆனால் அவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு இலக்கானவர். எனவே, அவரைப் பற்றிய அறிமுகத்தில் அவர் ஒரு கயவர் என்பது பிரதானமாக இடம் பெறவேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறித்தினர். இன்னொரு தரப்பினரோ போல்ன்ஸ்கியின் மேதமையை இந்த கைது எந்த விதத்திலும் பாதிக்காது. ஆகவே இதனை பெரிதுபடுத்தாமல் ஒரு தகவலாக மட்டும் சேர்த்துக்கொண்டால் போதும் வாதிட்டனர்.

விக்கிபீடியாவில் தான் யார் வேண்டுமானாலும் திருத்த செய்யலாமே. முதல் முகாம் போல்ன்ஸ்கி கட்டுரையில் அவர் ஒரு 'காமுக கயவர்' என்பது போன்ற வாசகங்களை சேர்க்க, மறு முகாம் அதனை உடனே திருத்தியது. முதல் முகாம் மீண்டும் திருத்த பதிலுக்கு மறு முகாம் திருத்த... விக்கிபீடியாவில் திருத்தல் யுத்தம் வெடித்து, அதன் விளைவாக போலன்ஸ்கி கட்டுரை தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டது.

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று போட்டியின் போது அயர்லாந்துக்கு எதிராக இத்தாலி வீரர் ஹென்றி கையை கொண்டு கோல் அடிக்க சர்ர்சை எழுந்த போதும், அவரது விக்கிபீடியா பக்கம் இப்படி தாக்குதலுக்கு இலக்கானது.

இதனிடையே விக்கிபீடியாவின் விதிகள் கடுமையாக்கப்பட்டதன் விளைவாக, 49 ஆயிரம் விக்கி தொண்டர்கள் அதிருப்தியில் வெளியேறிவிட்டதாக ஓர் ஆய்வு தெரிவிக்க, விக்கியின் எதிர்காலம் குறித்த விவாதமும் அனல் பறந்தது.

ஃபேஸ்புக் மாயம்!

அமெரிக்கக் கல்லூரி மாணவர்களுக்கான சமூக வலைப்பின்னல் தளமாக அறிமுகமான ஃபேஸ்புக், பொது மக்களுக்கும் விரிவடைந்து, அதன் தொடர்ச்சியாக இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் விரிவடைந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் அமெரிக்காவுக்கு வெளியே தான் அபார வளர்ச்சி அடைந்தது.

ஃபேஸ்புக்கின் அசுர வளர்ச்சி புதிய போக்குகளுக்கும் புதிய வார்த்தைகளுக்கும் வித்திட்டது. நண்பர்களை தேடிக் கண்டுபிடிக்க உதவும் இந்தத் தளம் ஃபிரண்ட் என்னும் வார்த்தைக்கு புதிய அழுத்தத்தை தந்தது போல அன்ஃபிரண்ட், அதாவது நண்பனில்லாமல் செய்வது என்னும் புதிய வார்த்தைக்கும் வித்திட்டது. ஒருவரின் நண்பர் பட்டியலில் இருந்து குறிப்பிட்ட ஒருவரை நீக்குவதை குறிக்கும் இந்தச் சொல் ஆண்டின் சிறப்புச் சொல்லாகவும் அங்கீகரிக்கப்பட்டது.

ஃபேஸ்புக்கின் புதிய அந்தரங்க கொள்கை சற்றே சலசலப்பை உண்டாகவும் செய்தது. மொத்ததில் இது டிவிட்டர் ஆண்டு மட்டுமல்ல... ஃபேஸ்புக் ஆண்டும் தான்.

செயலிகளில் அசத்திய ஆப்பிள்!

ஒரு நிறுவனத்தின் விளம்பர வாசகத்தில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்குமானால், அது ஆப்பிளின் செயலிக்கான விளம்பர வாசகமாகத்தான் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரு செயலி (Operating System) உண்டு என்று ஆப்பிள் விளம்பரத்தில் பெருமைப்பட்டுக் கொள்வதை மெய்பிக்கும் வகையில், 2009 முழுவதும் விதவிதமான செயலிகள் அறிமுகமான வண்ணம் இருந்தன.

குழந்தை அழுவதை நிறுத்த ஒரு செயலி என்றால், குளியலறையை கண்டுபிடிக்க ஒரு செயலி உருவானது. டயட் அறிவுரை வழங்க ஒரு செயலி எனறால், விமான நிலையத்தில் அருகே இருக்கும் நண்பரை சுட்டிக்காட்ட ஒரு செயலி அறிமுகமனது. இதற்கெல்லாம் கூட செயலி உண்டா என்று வியந்து போகும் வகையில் புதுமையான மற்றும் பயன் மிக்க செயலிகள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. ஐபோனுக்கான சின்ன சின்ன சாஃப்ட்வேருக்கு ஆப்பிள் கொடுத்த ஆப்ஸ் (செயலி) என்னும் பெயர் தனக்கே உரிய அர்த்ததோடு இணைய உலகில் கோலோச்சுகிறது.

செயலிகள் அறிமுகமான் வேகத்தால் ஏப்ரல் மாதம் நூறு கோடி செயலி டவுன்லோடு மைல்கல்லை தொட்ட ஆப்பிள், சில மாதங்களிலேயே 200 கோடி டவுன்லோடு சிகரத்தை தொட்டது. செயலிகளின் செல்வாக்கால் ஆப்பிள் ஸ்மார்ட்போன் சந்தையில் தனிக்காட்டி ராஜாவாக திகழ்கிறது. அது மட்டுமல்ல, பலமென்பொருள் நிபுணர்கள் செயலிகள் புண்ணியத்தால் ஆயிரங்களையும் லட்சங்களையும் சம்பாதித்து வருகின்றனர்.


கூகுல் சித்திரங்கள்!

கூகுல் சில நேரங்களில் தனது லோகோவையே சித்திரமாக மாற்றி அமைத்து வியக்க வைப்பதுண்டு. கூகுல் டூடுல் என்று சொல்லப்படும் இந்த லோகோ விளையாட்டு முக்கிய தினங்கள் மற்றும் மேதைகளின் நினைவு தினங்களின் போது அரங்கேறுவது வழக்கம்.

கடந்த ஆண்டு முழுவதும் கூகுல் பல்வேறு சந்தர்பங்களில் விதவிதமான லோகோ சித்திரத்தை உருவாக்கி இந்த நிகழ்வை இணைய உலகம் முழுவதும் பிரபலாமாக்கியது. கலிலியோ, மகாதமா காந்தி ஆகியோர் தொடர்பான லோகோவை வடிவமைத்த கூகுல், பார்கோடு மற்றும் மோர்ஸ் கோடு குறித்த லோகோவையும் உருவாக்கி பரபப்பை ஏற்படுத்தியது. எதற்காக இந்த லோகோ என்னும் வியப்பை ஏற்படுத்தி, அதனை விளக்கும் தகவல்களை அளித்த இந்த லோகோக்கள் கூகுலை மேலும் இணையவாசிகளூக்கு நெருக்கமாக்கியது.

டிவிட்டர் ஆண்டு!

2009 ஆம் ஆண்டு இணைய உலகில் திரும்பிய இடமெல்லாம் ஒலித்த வார்த்தை... டிவிட்டர்.

140 எழுத்துக்களில் கருத்துக்களை பதிவு செய்ய உதவும் குறும்வலைப்பதிவு சேவையான டிவிட்டர், வெகுமக்களுக்கும் அறிமுகமானதோடு செய்தி வெளியீட்டுக்கான சாதனமாக அறிமுகமாகி செல்வாக்கு பெற்றது. மைக்கேல் ஜாகசன் மரணத்தில் துவங்கி, விமான விபத்து வரை பல நேரங்களில் உடனடி செய்திகள், டிவிட்டர் மூலமே வெளியானது. அதோடு ஈரானில் அதிபர் தேர்தலில் முறைகேடு ஏற்பட்ட போது, அரசின் கட்டுப்படுகளை மீறி வன்முறை மற்றும் தேர்தல் தில்லுமுல்லு தொடர்பான செய்திகளை ஈரான் மக்கள் டிவிட்டர் மூலம் உலகின் பார்வைக்கு கொண்டு சென்றனர். ஈரான் தேர்தல் தோடர்பான் அமெரிக்க மீடியாவின் கவனம் போதுமானதல்ல என்று எடுத்துச் சொல்லவும் டிவிட்டர் பயன்பட்டது. ஈரான் போராட்டத்தில் டிவிட்டரின் பங்களிப்பு காரணமாக அந்த தளத்தின் வழக்கமான பாரமரிப்பு பணியை தாமதப்படுத்துமாறு அமெரிக்க அரசு கேட்டுக்கொள்ளும் அளவுக்கு டிவிட்டர் முக்கியத்துவம் பெற்றது.

இதற்கு முன்னர் மால்டோவா நாட்டிலும் டிவிட்டர் சின்னதாக ஒரு புரட்சிக்கு வித்திட்டது. இதே போல புதிய ஹாலிவுட் படங்களை பார்த்த ரசிகர்கள் உடனே டிவிட்டரில் படம் எப்படி என கருத்து தெரிவித்து பாக்ஸ் ஆபிஸ் வசூலை தீர்மானித்தனர்.
இப்படி எங்கு பார்த்தாலும் டிவிட்டர்மயம் தான். இதுவரை டிவிட்டரை கேள்விப்பட்டிறாதவர்கள் கூட அட டிவிட்டர் என்றால் என்ன என்று கேட்டு, அதன் அபிமானிகள் ஆயினர்.

டிவிட்டரில் குதித்த பிரபலங்களின் பட்டியல் மேலும் புகழை ஏற்படுத்தியது. சுருக்கமாகச் சொன்னால் 2009 - டிவிட்டர் ஆண்டு. இந்த ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட சொற்களில் 'டிவிட்டர்' முதலிடம் பெற்றது பொருத்தமானது தானே!

மூன்றாம் தலைமுறை செல்பேசிகள் (3G)




“3G” நெட்வொர்க்கில் புகுந்து விளையாடுங்கள், என்கிறார்களே - 3G என்றால் என்னவென்று பார்ப்போம்.

கம்ப்யூட்டரின் வளர்ச்சியை பல்வேறு தலைமுறைகளாகப் பிரித்தது போல, தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகளையும் அவ்வாறு பிரிக்க முடியும். குறிப்பாக கவனம் செலுத்த வேண்டியது, ஒரே ஒரு தொலைத் தொடர்பு அம்சம் மட்டுமே - வயர்லெஸ் டெலிஃபோன் - பயனாளர் பாஷையில் ‘செல்ஃபோன்’.

உங்கள் செல்ஃபோன் வேலை செய்வது எப்படி? செல்ஃபோன், உங்கள் அருகாமையில் உள்ள “கம்யூனிகேஷன் டவர்” உடன் தொடர்பு கொண்ட பிறகு, அந்த “டவர்” உங்களை உலக நெட்வொர்க்கில் இணைத்து விடுகின்றது. டவரின் உயரத்துக்கேற்ப அது தொடர்பு ஏற்படுத்தக் கூடிய பரப்பளவு அதிகரிக்கும் . சிறு வயதில், டி.வி.யின் ஆண்டெனாவை தந்தை வீட்டின் மொட்டை மாடியில் வைத்து, டி.வி. தெரிகின்றதா என்று பார்க்கச் சொல்வாரே, அது போலத்தான்! அத்தனை டவர்களையும் ஒரு “நெட்வொர்க்” இணைத்து வைக்கின்றது. அப்படி இணைக்கும் நெட்வொர்க்குகளைப் பற்றித்தான் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கின்றோம்.

GSM மற்றும் CDMA என இரு தொழில்நுட்பங்கள் செல்ஃபோனில் உண்டு. ரிலையன்ஸ், டாட்டா இண்டிகாம் போன்ற நிறுவனங்கள் CDMA வசதியைத் தருகின்றன. இதர நிறுவனங்கள், எடுத்துக்காட்டாக, ஏர்டெல், வொடாஃபோன் போன்றவை GSM உபயோகப்படுத்துகின்றனர். இவை இரண்டுமே 2G நெட்வொர்க்கின் வகைகள்.

ஓ! அப்படியென்றால் 2G என்ற ஒன்றும் உண்டா! ஆம், இத்தனை நாட்களாக நாம் (ஏன், இன்னும் கூடப் பெரும்பாலானவர்கள்) உபயோகிப்பது 2G நெட்வொர்க்குகளைத்தான். அதற்கு முன்னால், 1Gயும் உண்டு. இரண்டாம் உலகப்போரின் சமயம், ரேடியோ ஃபோன்களின் மூலம் பேசிக் கொண்டார்களே, அது 0G நெட்வொர்க் ஆகும். “தொலைதூரம்” என்று சொல்ல முடியாவிட்டாலும், அதுவும் வயர்லெஸ்தானே!

1G நெட்வொர்க்குகளின் மூலம்தான் முதன் முதலில் உலகில் இருக்கும் அனைத்து செல்ஃபோன்களையும் இணைக்க முடிந்தது. இது நடந்தது கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால். இந்த நெட்வொர்க்குகள் உபயோகித்தது அனலாக் சிக்னல்களை. (அனலாக் என்றால் - நேரத்துடன் தொடர்ச்சியாக மாறும் சிக்னல்கள்). 1991ல் முதன் முறையாக அனலாகுக்கு டாட்டா சொல்லிவிட்டு, டிஜிடலினுள் செல்ஃபோன் குதித்தது. டிஜிடல் என்றால்? தொடர்ச்சியாக மாறாமல், விட்டு விட்டு மாறும் சிக்னல்கள். இதற்கு மேல் விளக்கம் தேவை என்றால், உங்களுக்குத் தெரிந்த எலக்ட்ரிகல்/எலெக்ட்ரானிக்ஸ் பயிலும் மாணவர்களை கேளுங்கள், அழகாக படம் வரைந்து விளக்கம் தருவார்கள்.

அது சரி, இந்த 2Gயால் என்ன லாபம்? கண்கூடாகத் தெரியவில்லையா - அதன் பிறகுதான் பாமரனும் செல்ஃபோன் உபயோகிக்க ஆரம்பித்தான். ஸ்டோரேஜ் என்று சொல்லப்படும் “செய்திகளைச் சேர்த்து வைத்தல்” மிகவும் சுலபமானது. (ஒரே அலைவரிசையில் இன்னும் நிறைய கால்களை அனுமதிக்க முடியும்!)

கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது 3G வந்திருக்கின்றது! புதிதாக என்ன சாதித்திருக்கின்றார்கள்? 2Gயில் என்ன குறை கண்டார்கள்?!

முன்பெல்லாம் செல்ஃபோன்களைப் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்தோம். GSM போன்ற 2G நெட்வொர்க்குகளுக்கு இது சர்வ சாதாரணம். அவைகளின் முக்கிய வேலையும் அதுதான். அவ்வப்பொழுது, இணையதள வசதியைப் பயன்படுத்தலாம். ஆனால், உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்துக்கும், அதன் வேகத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. (“இல்லையே, என் ஃபோன் வேகமா இருக்கே” என்று நீங்கள் சொன்னால், பதில் இதுதான் “சின்னச் சின்ன இணையப் பக்கங்களை நீங்கள் பார்ப்பதால்தான். ஒரு நூறு எம்.பி ஃபைலை தரவிறக்க முயற்சி செய்யுங்கள், உங்கள் ஃபோன் என்ன சொல்கிறதென்று பார்ப்போம்!)

அது மட்டும் இல்லை, இணைய வசதிகளை 2G தருவதற்கு, நீங்கள் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். காரில் பறந்து கொண்டே இணையத்தின் மூலம் சினிமா பார்க்க முடியாது. ஏன், ஒரு பக்கத்தைத் தரவிறக்குவதே கடினம்தான். ரயில்களில் செல்லும்பொழுது செல்ஃபோன் வேலை செய்யாமல் படுத்துமல்லவா, அதைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்!

போதாத குறைக்கு, இப்பொழுது காலம் மாறிவிட்டது, செல்ஃபோன் பேசுவதற்கு மட்டும் பயன்படும் பொருள் அல்ல. நமக்கு செல்ஃபோனிலேயே எல்லாம் வேண்டும். என் மொத்தப் பாடல் தொகுப்பு, பத்துப் பதினைந்து திரைப்படங்கள், ஈ-மெயில், இணையம், எல்லாமும் செல்ஃபோனிலேயே வேண்டும். 2Gயால் இது முடியாது - அதனால்தான் வந்தது 3G.

3G அனைத்துக்கும் பதில் வைத்திருக்கின்றது. சரி, பொறியாளர்களுக்காக சில கணக்குகள் - 2G தரும் வேகம் கிட்டத்தட்ட பத்து கிலோபைட், ஒரு வினாடிக்கு. அந்த வேகம் ஒரே இடத்தில் இருந்தால் மட்டுமே. நாம் நகர்ந்து கொண்டே இருந்தோமானால் இதுவும் வராது. 3G எவ்வளவு தருகின்றது? கிட்டத்தட்ட இரண்டாயிரம் கிலோபைட்ஸ், ஒரு நொடிக்கு - ஒரே இடத்தில் இருந்தால்! அதி வேகத்தில் பறந்துகொண்டே 3G நெட்வொர்க்கை நோண்டினால், கிட்டத்தட்ட நொடிக்கு முன்னூறு கிலோபைட்ஸ்!!

இனி ட்ரெய்னில் போய்க்கொண்டே, செல்ஃபோனைக் கையில் வைத்த படி உலகைக் கை வசப்படுத்த முடியும். “லேட் ஆகி விட்டது” என்று அவசரக் கடிதம் எழுதலாம். செல்ஃபோன் பில் மட்டும் அல்லாது, எல்லா பில்களையும் உள்ளங்கையிலேயே கட்டி விடலாம். பேங் அக்கவுண்ட்களைப் பராமரிக்கலாம். ஊர் சுற்றிக்கொண்டு இருக்கும்பொழுது தொலைந்து போனால், கூகில் மேப்ஸ் உதவியுடன் எங்கிருக்கின்றோம் என அறிந்து கொள்ளலாம். இவ்வளவு ஏன், சினிமா பார்க்கலாம், பாட்டு கேட்கலாம், கதை படிக்கலாம், அரட்டை அடிக்கலாம் (வீடியோ உடன் கூடிய அரட்டை) - எல்லாம் உள்ளங்கையிலேயே!

ஒரே வரியில் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், இதற்கு முன் இருந்த செல்ஃபோன் நெட்வொர்க்களையும், ப்ராட்பேண்ட் தர இணையதள நெட்வொர்க்குகளையும் 3G ஒன்றாக இணைத்துவிட்டது.

3G நெட்வொர்க் ஃபோன்கள் சற்று விலை அதிகமாகவே விற்கின்றன. ஆயிரம் ரூபாய்க்கெல்லாம் கிடைக்காது. கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடங்கள் போராடி இது எல்லா நாடுகளிலும் கிடைக்கும்படி செய்திருக்கின்றார்கள். முன்பு சொல்லியிருந்தது போல, ஒவ்வொரு நாட்டிற்கும் தனியாக லைஸென்ஸ் பெற வேண்டும்.

சரி, ஏழெட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தது இப்பொழுது பிரபலமாகி விட்டது. 4G நெட்வொர்க்குகளைப் பற்றிய ஆராய்ச்சி தீவிரமாக நடக்க ஆரம்பித்து விட்டது. ஒரே வரியில் அதைப் பற்றிச் சொல்கிறேன்! ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. முகவரி இருப்பதை நாம் அறிவோம்! அது போல, ஒவ்வொரு செல்ஃபோனுக்கும் ஒரு ஐ.பி. முகவரி இருந்தால் எப்படி இருக்கும்!! சிந்தனை செய்தால், எனக்கு தலை எல்லாம் சுற்றுகிறது! இன்னும் நான்கைந்து வருடங்களில் 4G பற்றிய விரிவான கட்டுரையை நீங்கள் எதிர்பார்க்கலாம்!

ஹைகூ


மொத்தம் மூன்று வரிகள், மிகுந்தால் நான்கு.... எல்லோரையும் எளிதில் கவர்ந்து விடும் ஹைகூ ஜப்பானிய மொழியிலிருந்து தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ‘கவிதை வடிவம்’. இதன் எளிமையே இதன் கவர்ச்சிக்குக் காரணம். இதை முதலில் தமிழுக்கு மொழிமாற்றம் செய்து அறிமுகப்படுத்தியவர் திருமதி லீலாவதி அவர்கள்.

“ஏதோ ஐந்தாறு வார்த்தைகளைப் போட்டோமா.. மூன்று வரிகள் எழுதினோமா.. ஹைகூன்னு தலைப்பைப் போட்டோமா!” இப்படி சுலபத்தில் தோன்றியதை எழுதுவது ஹைகூ அல்ல! திருமதி லீலாவதி அவர்கள் தமது தொகுப்பில், “ஹைகூ என்பது கவிதையானாலும், எல்லாக் கவிதையும் ஹைகூ ஆகிவிட முடியாது” என்று கூறியுள்ளார். புதுக்கவிதைக்கு எந்த விதமான வரையறைகளும் இல்லை. ஆனால் ஹைகூவிற்குச் சில வரையறைகள் உண்டு.

இரண்டு வரிகளில் ஒன்றும் புரியாமல், மூன்றாவது வரியில் படிப்பவர்க்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியதாக ஹைகூவை அமைக்கலாம். அல்லது மூன்றாவது வரியின் விளக்கம் முதல் இரண்டு வரிகளில் வருமாறு அமைக்கலாம். சமுதாயத்தின் பிரதிபலிப்பாகவே பெரும்பாலான ஹைகூக்கள் அமைக்கப் படுகின்றன. விரைவாகவும், எளிதாகவும் ஒரு செய்தியைச் சொல்வதற்கு இதை விடச் சிறந்த ஒரு வடிவம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கவிஞர் அறிவுமதி தமது ஒரு தொகுப்பில், “சக மனிதர்களோடு மட்டுமின்றி, தளிர்களோடும், மொட்டுக்களோடும், சருகுகளோடும், தும்பிகளோடும், வண்ணத்துப் பூச்சிகளோடும், குயில்களோடும், நட்சத்திரங்களோடும், கடலின் ஆழங்களோடும், காற்றின் அசைவுகளோடும் நம்மை நட்பு கொள்ளத் தோன்றும் அற்புத வடிவம்தான் ஹைகூ” என்று கூறியுள்ளார்.



ஜப்பானிய ஹைகூக்கள்

1. காலைப் பனியில்
மலர்கள் விற்கும் முரடன்
கொல்லாதே! கைகளையும்
கால்களையும் தேய்த்துக் கொண்டிருக்கிறது
“ஈ”....

2. செவிட்டு ஊமையின்
பிச்சைப் பாத்திரத்தைத்
தட்டுகிறது
“மழை”...

தமிழ் ஹைகூக்கள்

1.கனவுகளோடு பறந்தோம்!
கனவுகளும் பறந்தன
“துபாய் வாழ்வு”

2.ஆங்கிலத்தில் அறிவிப்பு
இந்திப் பாடலுக்கு நடனம்
“தமிழ்ச் சங்க நிகழ்ச்சி”

3.தீப்பெட்டியைத்
திறந்தேன்
“பிஞ்சு விரல்கள்”

4.தொடர் மழைக்காலம்
குப்பைகளுக்கும் குடை!
“காளான்கள்”

5.எதிர் வீட்டுச் சன்னல்களில்
எத்தனை சட்டைகள்!
என் சட்டையில் எத்தனை ஜன்னல்கள்!

6.ராகங்கள் எரிகின்றன
அழுமா மழை?
“மூங்கில் காட்டில் தீ”

7.கிணற்றுச் சரிவில்
குருவியும் குஞ்சுகளும்
“மனதில் இருக்குது வாழ்க்கை!”

8. மரணத்தைச் சுவாசிக்கக்
கால இடைவெளி
“ஃப்ரிட்ஜில் பூ”

9.புகை கக்கியபடி
வருகிறது நந்தவனம்
“லேடீஸ் பஸ்”

10.பிறக்கும் போதே
சிக்கலுடன் பிறக்கிறது
“ஜாங்கிரி”

11.நல்ல வெயில்
தோகை விரித்தது மயில்
“குடையுடன் அவள்”

12.வாரிசுகளை நம்பாமல்
தனக்குத் தானே கொள்ளி
“உதட்டிடுக்கில் புகை”

13.உருவம் தவிர்த்து
உணரத் தொடங்கு
“காதலோ! கடவுளோ!”

14.வாங்கியதால் உள்ளே தள்ளிவிட்டார்கள்....
கொடுத்ததால் வெளியே வந்துவிட்டேன்....
“லஞ்சம்”

15.புரண்டு புரண்டு அழுகை
அப்படி என்னதான் குறை?
“பேசுமா அலைகள்!”

Welcome to Anjahli's Blog


Welcome to my blog! I'm not sure exactly what I'll be writing about. But I just started to writing. Please write your feedbacks and Articles. Please reply with better article if you know. I will write my own very soon. Cheers!

Regards,
Anjahli [Blog Admin]